court

img

அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடு வழங்க நீதிம்ன்றம் உத்தரவு!

அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவர் காவலர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
முன்னதாக அஜித்குமாரின் குடும்பத்துக்குத்  தமிழ்நாடு அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடும்,இலவச வீட்டுமனை மற்றும் அவரது தம்பிக்கு அரசு வேலை என அறிவித்திருந்தது.
இந்நிலையில் அஜித்குமாரின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரு.25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், சக்தீஸ்வரன்,பிரவீன், அருண் ஆகியோர் பாதுகாப்பு கோரி தொடுத்த மனுவை 7 நாட்களுக்குள் நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.